படத்தயா‌ரிப்பில் இறங்கும் சேரன்

Webdunia| Last Modified வியாழன், 1 நவம்பர் 2012 (19:42 IST)
FILE
படத்தயா‌ரிப்பில் இறங்குகிறார் என்றால் படுபாதாளத்துக்கு செல்வது போல் பதற வேண்டிய சூழலில் இருக்கிறது தமிழ் சினிமா. முன்பு பத்தில் ஆறு பழுதில்லாமல் இருந்தது என்றால் இப்போது பத்துக்கு பத்தும் படுத்துவிடுகிறது. படங்களில் தேறுகிற படங்களின் எண்ணிக்கையை சொல்கிறோம்.

சேரன் நல்ல இயக்குனர். இயக்கத்தை மட்டும் சிந்தித்தால் உதி‌ரிபூக்கள் அருகில் வருகிற படங்களை அவரால் தர முடியும். நடிகன், தயா‌ரிப்பாளன் என்று திசை மாறியதால் சேரனுக்கு நஷ்டம் பல கோடிகள். நமக்கு ஒரு இயக்குனர். இந்த மந்திர சுழியிலிருந்து சேரன் விடுபடுவதாக இல்லை.
தனது உதவியாளர் எழில்பாரதி இயக்கும் படத்தை சேரன் தயா‌ரிக்கவிருப்பதாக காற்றுவாக்கில் செய்தி வந்துள்ளது. உண்மையாக இருந்தால் அவ‌ரின் துணிச்சலுக்கு நமது பாராட்டுகள்.


இதில் மேலும் படிக்கவும் :