வேங்கையும் சேது வேங்கையும்

Webdunia| Last Modified வியாழன், 25 நவம்பர் 2010 (13:57 IST)
ஒரு வழியாக வேங்கை டைட்டிலை வாங்கிவிட்டார் ஹ‌ி. வாங்கியதோடு விளம்பரமும் செய்து படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டது வேங்கை டீம்.

தனுஷ், தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ரா‌ஜ்கிரண் நடிக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பு.

வேங்கையை ஹ‌ி வென்றெடுத்தாலும் அவருக்குப் போட்டியாக இன்னொரு வேங்கை விரைவில் ‌ரிலீஸாகப் போகிறது. சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடித்திருக்கும் சேது வேங்கைதான் அது.
படத்தின் பெயர் சேது வேங்கை என்பதில் தயா‌ரிப்பாளர் உறுதியாக இருப்பதால் அந்தப் பெய‌ரிலேயே படம் வெளியாகிறது. டைட்டிலையும் பல மாதங்களுக்கு முன்பே முறைப்படி சேம்ப‌ரில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

படத்தை கேந்திரன் முனியசாமி இயக்கியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :