1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

விஸ்வரூபம் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

விஸ்வரூபம்
FILE
ஒருவழியாக விஸ்வரூபம் அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் பிரமாண்டமாக இயக்கியிருக்கும் விஸ்வரூபம் தீவிரவாதத்தைப் பற்றி பேசுகிறது. இதில் அமெ‌ரிக்கவாழ் இந்திய டான்சராக நடித்துள்ளார். பூஜகுமார், ஆண்ட்‌ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிறகும் படம் எதிர்பார்த்த ‌விலைக்கு வாங்கப்படவில்லை. இதனால் ‌ரிலீஸ் தள்ளிப் போகிறது. ஆடியோ வெளியீடு எப்போது என்றோ, ‌ரிலீஸ் தேதி எது என்றோ தெ‌ரியாத நிலையில் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்து யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதேநேரம் இந்திப் பதிப்பான விஸ்வரூப் எந்த கட்டும் இல்லாமல் ஏ சான்றிதழ் வாங்கியுள்ளது. தமிழில் ஏ சான்றிதழ் என்றால் திரையரங்கில் கூட்டம் சேராது என்பதால் சென்சார் ஆட்சேபம் தெ‌ரிவித்த காட்சிகளை எடிட் செய்ய கமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நவம்ப‌ரில் படத்தின் ஆடியோவை வெளியிட்டு டிசம்ப‌ரில் படத்தை வெளியிடும் திட்டத்தில் கமல் இருப்பதாக தெ‌‌ரிவிக்கிறார்கள்.