விளம்பரத்திற்கு நோ சொல்லும் ‌ஸ்ரு‌தி

Ravivarma| Last Modified வெள்ளி, 9 மே 2014 (15:50 IST)
எந்த விதமான விற்பனை பொருட்களின் விளம்பரங்களிலும் நடிக்க கூடாது என்பதில் உறுதியோடு கடைப்பிடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். அவரின் மகள் ஸ்ருதி ஹாசனும் ஒரு கொள்கை பிடிப்போடு இருந்து வருகிறார். 
அவர் பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தாலும், அழகு சாதன க்ரீம் பொருட்களின் விளம்பரங்களில் மட்டும் நடிக்க கூடாது என்பதுதான் அது. 
 
முதலில், அழகு என்பது சிவப்பில்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எல்லா பெண்களும், ஆண்களும் கருப்பாக, மா நிறமாக எப்படி இருந்தாலும் அவரவர்கள் ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள்தான். 
 
அந்த இயற்கையான அழகை ஏன் அழகு க்ரீம் களால் மாற்றவேண்டும். அந்த மாதிரியான விஷயங்களில் உடன்பாடு இல்லாததால், பல நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கத் தாயாராக இருந்த நிலையிலும் நடிக்கவில்லை என்கிறார் ஸ்ருதி.


இதில் மேலும் படிக்கவும் :