வினையாகும் வேங்கை

Webdunia| Last Modified வெள்ளி, 19 நவம்பர் 2010 (19:47 IST)
விலங்குகளை காட்டுக்குள் வேட்டையாடுகிறார்கள் என்றால் சிலர் நாட்டுக்குள்ளும் அவற்றை துன்புறுத்துகிறார்கள்.

சூர்யாவை வைத்து ஹ‌ி இயக்கிய படம் சிங்கம். சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துவரும் படமோ சிறுத்தை. ஹ‌ி அடுத்து தனுஷை வைத்து இயக்கும் படம் வேங்கை. இந்த வேங்கைதான் இப்போது பிரச்சனை.

வேங்கை தலைப்பை அறிமுக இயக்குனர் ஒருவர் ஏற்கனவே சேம்ப‌ரில் பதிவு செய்து வைத்திருப்பதால் ஹ‌ி தரப்பு அவ‌ரிடம் வேங்கை டைட்டிலை கேட்டு வருகிறது. இது கேட்டு‌ப் பெறுவது என்பதைத் தாண்டி மிரட்டி வாங்குவது என்பதுவரை சென்றிருப்பதாக‌க் கேள்வி.
அய்யன் படக்குழுவும் இதேபோலொரு பிரச்சனையில்தான் இருக்கிறது. அய்யன் என்பது பழைய பெயர் என்பதால் படத்தின் பெயரை சேது வேங்கை என மாற்றத் தீர்மானித்துள்ளார்கள்.

தனி வேங்கைக்கே தகராறு, இதில் சேது வேங்கையும் சேர்ந்து கொண்டால்...? யுத்தகாண்டம்தான்.


இதில் மேலும் படிக்கவும் :