விஜய் பார்ட்டி - த்ரிஷாவுக்கு அழைப்பில்லை!

Webdunia| Last Modified புதன், 2 ஜூலை 2008 (20:36 IST)
விஜய் பார்ட்டி நடத்தினால் யார் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ, நடுநிலையாக த்ரிஷா வீற்றிருப்பதை காணலாம். ஆதி படத்தின்போது விஜயும் த்ரிஷாவும் இணைந்து பார்ட்டி தந்தனர்.

அது ஒரு கனாக்காலம்! த்ரிஷாவுக்கு அழைப்பு அனுப்பாமலே தனது பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடினார் விஜய். த்ரிஷா மிஸ்ஸான இடத்தை நிரப்பியவர் விஜயின் புதிய தோழி நயன்தாரா.

குருவியில் விஜய் நயன்தாராவை ரெகமண்ட செய்ய, குறுக்கு வாயில் குருவியில் இடம் பிடித்தார் த்ரிஷா. படமாவது ஓடியதா என்றால் அதுவுமில்லை. இந்த ஒட்டுமொத்த எரிச்சலில் த்ரிஷாவை கழற்றிவிட்டு நயன்தாராவை சேர்த்துக் கொண்டார் என்கிறார்கள்.
எப்படியோ... இனிவரும் படங்களில் அலுத்துப்போன இந்த ஜோடி இடம்பெறாது. ரசிகர்களுக்கும் அதுதான் வேண்டும்!


இதில் மேலும் படிக்கவும் :