1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. விஜய்யின் புதிய படம் வேலாயுதம்

Vijay film name 'Velayudham' | விஜய்யின் புதிய படம் வேலாயுதம்

விஜய்
கேட்டால் கிறுகிறுக்கிற மாதி‌ரியான பெயர்களை தேர்வு செய்வதுதான் விஜய்யின் வழக்கம். ஆனால் முதல் முறையாக ஒரு சாதாரண தமிழ்ப் பெயரை தனது படத்துக்கு வைத்திருக்கிறார்.

சித்திக் இயக்கும் காவல்காரன் படத்துக்குப் பிறகு ஜெயம் ராஜஇயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். தயா‌ரிப்பு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். விஜய்யின் பிறந்தநாள் அன்று ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, இலவச திருமணங்கள் நடத்தி இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக யார் நடிக்கிறார், இசை யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. அதேநேரம் படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் வைத்துள்ளனர்.

கிராமத்தில் மட்டுமே புழங்கும் பெயர் வேலாயுதம். விஜய் தனது வழக்கமான கமர்ஷியலை தவிர்த்து கதைப் படத்தில் நடிக்க முன்வந்துள்ளாரோ என்ற சந்தோஷ சந்தேகத்தை இந்த‌ப் பெயர் ஏற்படுத்தியிருக்கிறது.