Vijayakanth's panch in Viruthagiri | விஜயகாந்தின் விருதகிரி பன்ச்
அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு வெளியான விஜயகாந்தின் எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இது விஜயகாந்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெருத்த அடிதான்.
விஜயகாந்தின் புதிய படமான விருதகிரி இந்த தோல்வியின் கணக்கை முடித்து வைக்கும் என அவரது நலம் விரும்பிகள் நம்புகிறார்கள். சரியாகச் சொல்வதென்றால், பிரார்த்திக்கிறார்கள். விருதகிரி கண்டிப்பாக ஜெயித்தே ஆக வேண்டும். நடிப்பதோடு படத்தை விஜயகாந்தே இயக்குவதால்தான் இந்த அழுத்தம்.
படத்தின் கதை குறித்து பல்வேறு யூகங்கள் கோடம்பாக்கத்தில் நிலவுகிறது. ஹாலிவுட்டில் வெளியான டேக்கன் படத்தையே சிறிது மாற்றி விருதகிரியாக எடுத்து வருகிறார்கள் என்பது அதில் ஒன்று. படம் வந்தால் உண்மை என்னவென்று தெரிந்துவிடும். அதற்கு முன்னால் விஜயகாந்த் பேசும் பன்ச் டயலாக்குகளில் ஒன்று மட்டும் சாம்பிளுக்கு.
அணியா ஆளுறதைவிட தனியா வாழுறதுதான் பெருமை.
கூட்டணி அமைக்கிறதுக்கு முன்னாடி படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க.