வஸந்த் படத்துக்கு யு சான்றிதழ்

Webdunia| Last Modified செவ்வாய், 26 மார்ச் 2013 (19:30 IST)
FILE
கேளடி கண்மணி வஸந்த் இயக்கியிருக்கும் மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சத்தம் போடாதே படத்துக்குப் பிறகு நீண்ட நாட்கள் படம் பண்ணாமலிருந்தவர் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோரை வைத்து எடுத்திருக்கும் படம்தான் மூன்று பேர் மூன்று காதல். யுவன் ஷங்கர் ராஜஇசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை வஸந்த் தயா‌ரித்துள்ளார். படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை ஸீ வாங்கியுள்ளது.
இரண்டு தினங்கள் முன்பு சென்சாருக்கு படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் ஒட்டு மொத்தமாக நல்ல படம் என பாராட்டியதோடு ஒரு சின்ன காட்சியில் கூட கைவைக்கவில்லை. அப்படியே படத்தை அனுமதித்து யு சான்றிதழ் தந்து வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள்.

முதல் சோதனையை வெற்றிகரமாக கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தயா‌ரிப்பாளரும், வஸந்தும்.


இதில் மேலும் படிக்கவும் :