ராஜ மௌலி இயக்கத்தில் விக்ரம்?

Webdunia| Last Modified வியாழன், 1 அக்டோபர் 2009 (16:28 IST)
விக்ரமின் அந்நியன் தமிழை விட தெலுங்கில் அதிக வரவேற்புடன் ஓடியது. விக்ரமின் அனைத்துப் படங்களுக்கும் ஆந்திராவில் நேரடி தெலுங்குப் படத்துக்கான ம‌ரியாதை உள்ளது.

பல தயா‌ரிப்பாளர்கள் தெலுங்கில் படம் பண்ண விக்ரமை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அழைப்புக்கு அவர் விரைவில் செவி சாய்க்கக் கூடும்.

ராவண் படத்தைத் தொடர்ந்து விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இதையடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் ராஜ மௌலி இயக்கத்தில் நடிக்க அதிக சாத்தியமுள்ளதாக இன்டஸ்ட்‌ரி கிசுகிசுக்கிறது.
ராஜ மௌலியின் மஹாதீரா மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றதால் அடுத்து அவர் யாரை வைத்து இயக்குவார் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

இந்நிலையில் விக்ரமை சந்தித்து பேசியிருக்கிறார் ராஜ மௌலி. வேறெதெற்கு... சேர்ந்து படம் பண்ணதான் இந்த சந்திப்பு. இவர்கள் இணையும் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் என்றும் கூறப்படுகிறது. ராவண் வெளியாகும்போது இந்த ரகசியம் வெளிப்படலாம்.


இதில் மேலும் படிக்கவும் :