1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. யுகே-யில் வேட்டைக்காரன்

Vettaikaran top in UK Box Office | யுகே-யில் வேட்டைக்காரன்

விஜய்
யுகே-யில் வேட்டைக்காரன் இந்திப் படங்களை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேட்டைக்காரனுக்குப் பிறகே மற்ற படங்கள் வருகின்றன.

18 ஆம் தேதி வெளியான வேட்டைக்காரன் யுகே-யிலும் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான மூன்று தினங்களில் 32.8 லட்சங்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. யுகே. பாக்ஸ் ஆஃபிஸில் வேட்டைக்காரனுக்கு கிடைத்திருக்கும் இடம் பதினான்கு.

வார இறு‌தி கலெ‌க்சனைப் பொறுத்தவரை வேட்டைக்காரனுக்குப் பிறகே பா, குர்பான் உள்ளிட்ட மற்ற இந்திப் படங்கள் வருகின்றன. (அதே நேரம் பா 1.14 கோடியும், தி‌ன் தனா தன் 4.13 கோடிகளும், குர்பான் 2.82 கோடிகளும் ஏற்கனவே வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது).

வேட்டைக்காரன் சென்ற வாரம் நல்ல வசூலைப் பெற்றாலும், விஜய்யின் முந்தையப் படங்களின் வசூலை தாண்டுமா என்பது சந்தேகமே.