மோகன்லாலின் வெற்றிநடை

Webdunia| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2010 (14:35 IST)
மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படத்தை சுறஎன்ற பெய‌ரில் தமிழில் எடுத்து வருகிறார்கள். சோட்டா மும்பையில் மோகன்லாலின் ஜோடியாக நடித்திருந்தவர் பாவனா.

மோகன்லால், பாவனா நடித்த மற்றொரு படமான சாகர் அலைஸ் ஜாக்கி விரைவில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. ஆ‌க்சன் படமான இதனை தமிழுக்கு கொண்டு வருகிறவர்கள், ஓம் ஸ்ரீசாய் சினி கி‌ரியேஷன்ஸ்.

மொழி மாற்றத்துக்கான அத்தனை வேலைகளும் தற்போது நடந்து வருகின்றன. சாய் ஸ்ரீனிவாஸ் வசனம் எழுத, டாக்டர் கிருதயா பாடல்கள் எழுதுகிறார்.
படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :