மொட்டை போடும் பத்மப்ரியா!

Webdunia| Last Modified செவ்வாய், 1 ஜூலை 2008 (20:23 IST)
கேரக்டருக்காக மரம் ஏறினார், ஏர் பிடித்து நிலம் உழுதார். இப்போது மொட்டையே அடிக்கப் போகிறார் பத்மப்ரியா.

பேட்டா விஷயத்தில் துரை படத்திலிருந்து கோபித்துக் கொண்டு விலகியவர், மலையாளத்தில் மட்டும், கொடுக்கிற காஸ்ட்யூமை அணிந்து, நீட்டுகிற சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார். ஏன் என்று கேட்டால் கதை அப்படி என்கிறார் ஒரே வரியில்.

அப்படி கதை பிடித்து பத்மப்ரியா நடிக்கும் படம் குட்டி ஸ்ட்ராங். உடன் நடிப்பது மம்முட்டி. இதில் பத்மப்ரியாவுக்கு புத்த பிட்சுணி வேடம். காவி உடையும் டாலடிக்கும் மொட்டை தலையும்தான் உடையும் தோற்றமும்.
மொட்டை அடிக்க மறுத்து பல மலையாள நடிகைகள் ஒதுங்க, மொட்டைக்குத் துணிந்து தனது தலையை ஒப்புக்கொடுத்துள்ளார் பத்மப்ரியா.

மம்முட்டி, பத்மப்ரியா இணைந்து நடித்த கமல் இயக்கிய படம் பத்மப்ரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.

இந்தப் படத்திலும் அது தொடரும் என நம்புகிறார் இந்த துணிச்சலான நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :