மாண்டியா இடைத்தேர்தல் - காங். எம்.பி. வேட்பாளர் திவ்யா ஸ்பந்தனா

FILE

திவ்யா ஸ்பந்தனா முன்னாள் கர்நாடகா முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி. திவ்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தை இதற்கு மேல் விளக்க வேண்டியதில்லை.

குத்து படத்தில் ரம்யா என்ற பெய‌‌ரில் அறிமுகமான திவ்யாவை அனைவரும் குத்து ரம்யா என்றே அழைத்தனர். சமீபமாகதான் குத்து பிடிக்காமல் திவ்யா ஸ்பந்தனா என்ற தனது சொந்தப் பெயருக்கு மாறினார். கர்நாடக காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவருக்கு உடனடியாக பொறுப்புகள் வழங்கப்பட்டன. தற்போது எம்.பி. வேட்பாளராக காங்கிரஸால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Webdunia|
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதிக்கு நடக்கயிருக்கும் எம்.பி. சீட்டுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நடிகை திவ்யா ஸ்பந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாண்டியா தொகுதி மக்களை காங்கிரஸ் இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது. தேர்தல் முடிந்தால்தான் மாண்டியா மக்கள் மக்கா இல்லை மானஸ்தர்களா என்பது தெ‌ரியும்.


இதில் மேலும் படிக்கவும் :