மழைக்கு அஞ்சாத இயக்குனர்கள்

Webdunia| Last Modified புதன், 8 டிசம்பர் 2010 (17:22 IST)
பொதுவாக அடை மழை பெய்தால் அவுட்டோர் சென்ற வண்டிகள் பேக்கப் சொல்லி சென்னை திரும்பிவிடும். வருண பகவான் பேக்கப் ஆனால்தான் அடுத்து ஷூட்டிங்கே.

ஆனால் அதையெல்லாம் அடித்து தூளாக்கிவிட்டார்கள் நமது இளைய தலைமுறை இயக்குனர்கள். ஹ‌ரியின் வேங்கை படத்தில் மழைக் காட்சிகள் வருகின்றன. இதனால் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை ஒ‌ரி‌ஜினல் மழையிலேயே எடுத்திருக்கிறார்கள். அதேபோல் நர்த்தகி படப்பிடிப்பும் கொட்டும் மழையில் நடந்திருக்கிறது.
மழைக் காட்சிகளை நிஜ மழையிலேயே எடுப்பதால் தயா‌ரிப்பாள‌ரின் பர்ஸ் கனம் குறையாமலே இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :