மக்கள் முன்னிலையில் பாடல்கள் வெளியீடு

FILE

படத்தில் பார்த்திபன் அரசுப் பேருந்து டிரைவராகவும், விமல் கண்டக்டராகவும் நடித்துள்ளதால் இன்று காலை சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் ஜன்னல் ஓரம் டீம் கிளம்பியது. தாம்பரம், குரோம்பேட்டை தொடங்கி கிண்டிவரை பல்வேறு பேருந்து நிலையங்களில் மக்கள் முன்னிலையில் பாடல்களை வெளியிடுவதற்காகதான் இந்தப் பயணம். அதிர்ஷ்டமிருக்கும் சென்னைவாசிகள் இந்த நேரடி ஷோவை இந்நேரம் கண்டு கழித்திருப்பீர்கள்.

Webdunia|
இந்நேரம் ஜன்னல் ஓரம் படக்குழு தங்களின் பாடல்களை மக்கள் முன்னிலையில் வெளியிட்டிருப்பார்கள்.
மலையாள ஆர்டின‌ரி படத்தின் ‌ரீமேக்தான் ஜன்னல் ஓரம். கரு.பழனியப்பன் இயக்கியிருக்கிறார். பார்த்திபன், விமல், மனிஷா யாதவ், பூர்ணா, விதார்த் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை வித்யாசாகர்.
மாலை 6 மணிக்கு கொண்டாட்டங்கள் அப்படியே கமலா திரையரங்குக்கு ஷிப்ட் ஆகிறது. திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விழாவில் நடிகர் சூர்யா படத்தின் பாடல் காட்சியையும், ட்ரெய்லரையும் வெளியிடுகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :