மகளை வைத்து படம் இயக்கும் ஆக்சன் கிங்

Ravivarma| Last Modified செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (13:49 IST)
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். என்ன காரணமோ... அதன் பிறகு எந்த வாய்ப்பும் அவர் வீட்டு கதவை தட்டவில்லை. அதனால் அர்ஜுனே மகளுக்காக ஒரு படத்தை இயக்குகிறார்.
அவர் தயாரித்து இயக்கி நடித்து வரும் ஜெய்ஹிந்த் 2 முடிவடைந்துவிட்டது. அப்படம் திரைக்கு வந்ததும் மகளை வைத்து அவரே ஒரு படம் இயக்க உள்ளார். ஐஸ்வர்யா ஜோடியாக இளம் நாயகன் ஒருவர் நடிப்பார் என தெரிகிறது. முக்கிய வேடத்தில் அர்ஜுனும் நடிக்கயிருக்கிறார்.
 
படம் குறித்த கூடுதல் விவரங்களை அவரே விரைவில் அறிவிக்க உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :