ப்‌ரியாமணி நம்பும் படம்

Webdunia| Last Modified புதன், 1 டிசம்பர் 2010 (16:14 IST)
வரும் வெள்ளிக்கிழமை ரத்த ச‌ரித்திரம் வெளியாகிறது. தெலுங்கு, இந்தியில் இரு பாகங்களாக வெளிவரும் இந்தப் படம் தமிழில் ஒரே பாகமாக வெளிவருகிறது. அதாவது முதல் பாகம் தமிழில் வெளியாகவில்லை. கதை தெ‌ரிய வேண்டும் என்பதற்காக முதல் பாகத்தின் சில காட்சிகளை தமிழில் சேர்த்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தில் சூர்யா ஜோடியாக சில காட்சிகளில் நடித்துள்ளார் ப்‌ரியாமணி. ப்‌ரியாமணிக்கும் தமிழ் சினிமாவுக்குமான பந்தம் இந்த ஒரு படத்‌தில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழில் இந்த ஒரு படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.
மணிரத்னத்தின் ராவணன் தராத பெயரையும், வாய்ப்பையும் இந்தப் படம் தனக்கு‌த் தரும் என்பது ப்‌ரியாமணியின் நம்பிக்கை.

தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார், தேசிய விருது வாங்கிய இந்த நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :