ப்ரியாமணிக்கு ப்ரியதர்ஷன் கல்தா

Webdunia| Last Modified வெள்ளி, 13 ஆகஸ்ட் 2010 (14:54 IST)
கட்ட மிட்டா மூலம் த்ரிஷாவை இந்தியில் அறிமுகப்படுத்தினார் ப்ரியதர்ஷன். தனது புதிய படமான புல்லட் ட்ரெய்னில் அவர் அறிமுகப்படுத்த விரும்பியது ப்ரியாமணியை.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, கங்கனா ரணவத்தை ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். கட்டா மிட்டா சரியாகப் போகாததால் மீண்டும் ஒரு தென்னிந்திய நடிகையை இந்தியில் அறிமுகப்படுத்தும் ரிஸ்க்கை ப்ரியதர்ஷன் எடுக்க விரும்பவில்லை என்று சிலரும், படத்தில் இரண்டுக்கு மேல் நாயகிகள் இருக்கிறார்கள், அதில் ஒருவர்தான் கங்கனா ரணவத், ப்ரியாமணியும் படத்தில் இருக்கிறார் என வேறு சிலரும் கூறுகிறார்கள்.
எப்படியோ ப்ரியாமணியின் புல்லட் ட்ரெய்ன் இப்போதைக்கு பிரேக் டவனில்தான் இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :