1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பொள்ளாச்சி போகும் வேட்டைக்காரன்

விஜய்
விஜய்யின் வேட்டைக்காரன் வேக வேகமாக வளர்ந்து வருகிறான். இதுவரை நடந்துள்ள ஷெட்யூலில் பாடல் காட்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லையே தவிர ஹியூமர், சென்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

விஜய்க்கு ஹியூமரில் கம்பெனி கொடுத்திருப்பது வடிவேலோ, விவேக்கோ அல்ல, படத்தின் நாயகி அனுஷ்காவோடுதான் ஏராளமான நகைச்சுவை காட்சிகளாம். இருவரும் ஹியூமர் ரோலில் பிண்ணி பெடலெடுத்துள்ளார்கள். ரொமாண்ட்ஸுக்கும் பஞ்சமில்லை.

அடுத்தகட்டமாக வேட்டைக்காரன் படக்குழு பொள்ளாச்சி செல்ல இருக்கிறது. ரொம்ப நாள் காத்திருந்து தனக்கு கிடைத்த வாய்ப்பென்பதால் நாயகி அனுஷ்கா அநியாயத்திற்கு ஒத்துழைப்பு தருகிறாராம். படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ரோல் அனுஷுக்கு.

இந்தப்படம், அடுத்து சூர்யாவோடு சிங்கம், அதற்கடுத்து கார்த்தியோடு சிறுத்தை என வரிசையாக ஸ்டார் வேல்யூ நாயகர்களோடு நடிக்க இருப்பதால், பூரிப்பில் ஒரு சுற்று பெருத்து‌வி‌ட்டா‌ர் பார்ட்டி...