1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2026 (20:42 IST)

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!
விஜய் டிவி பிரபலம் மணிமேகலை எதைச் செய்தாலும் அதில் ஒரு தனி 'ஹியூமர்' இருக்கும். இப்போது அவர் தனது திருடுபோன பைக் திருடனுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக விடுத்துள்ள கோரிக்கை இணையவாசிகளின் வயிற்றைப் புண்ணாக்கியுள்ளது.

 
2022-ம் ஆண்டு மணிமேகலை - ஹூசைன் ஜோடியின் ஆசை ஆசையாய் வாங்கப்பட்ட KTM பைக் திருடுபோனது. "கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்குன வண்டி" என அன்று கண்ணீரோடு வீடியோ போட்ட மணிமேகலைக்கு, இன்று ஒரு விசித்திரமான மெசேஜ் வந்துள்ளது.
 
இத்தனை வருடம் கழித்து மணிமேகலையின் மொபைலுக்கு,உங்கள் பைக்கிற்கான இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது, உடனே புதுப்பிக்கவும் என ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. வண்டி தன்னிடம் இல்லையென்றாலும், அதன் ஆவணங்களில் இன்னும் மணிமேகலையின் பெயர் இருப்பதால் இந்த மெசேஜ் வந்துள்ளது.
 
இதைப் பார்த்த மணிமேகலை சும்மா இருப்பாரா? உடனே அந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஸ்டேட்டஸ் தட்டிவிட்டார்.
 
திருடுபோன வண்டிக்கு இன்சூரன்ஸ் மெசேஜ் வருது. அந்தப் பாவிப் பய இன்சூரன்ஸ் கூட புதுப்பிக்காம வண்டிய ஓட்டிட்டு இருக்கான். கண்ணுல மட்டும் சிக்குனா..." என அவர் பதிவிட, அது இப்போது கோலிவுட் வட்டாரத்தில் செம வைரல் ஆகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள்  அவன் மேல கேஸ் போடாம இன்சூரன்ஸ் போடச் சொல்லி மெசேஜ் அனுப்புங்க மணிமேகலை என்று நக்கலாக பதிவிட்டு வருகின்றன.