1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. பிப்ரவரியில் ‘அசல்’

Asal may be a february release | பிப்ரவரியில் ‘அசல்’

பிப்ரவரி
பொங்கல் ஆர்ப்பாட்டங்கள் அடங்கிய பிறகு ‘அசல’ படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது சிவாஜி பிலிம்ஸ். ரிலீஸ் தேதி பிப்ரவரியில் இருக்கலாம்.

FILE
சரண், அஜீத் காம்பினேஷன் விநியோகஸ்தர்களுக்கு பிடித்தமான கூட்டணி. இதுவரை இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியதில்லை என்பது முக்கியமானது.

‘அசல’ படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்க பலருக்கும் ஆசை. சன் தொலைக்காட்சியும் அதில் ஒன்று. ஆனால் பிடிவாதமாக மறுத்திருக்கிறார்கள் சிவாஜியின் புத்திரர்கள். நல்ல விளைச்சலுக்கான அறுவடையை யாருக்கோ விட்டுத் தர வேண்டுமா என்ன?

அஜித்தின் ‘பில்ல’ படம்தான் அவர் நடித்தப் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம். அதனை ‘அசல’ முந்தும் என்கின்றன செய்திகள். ஏறக்குறைய 500 பிரிண்ட்கள். நிஜமாகவே அல்டிமேட் ஸ்டார்தான்.