பாலுமகேந்திரா இயக்கத்தில் ப்‌ரியாமணி

Webdunia| Last Modified புதன், 1 செப்டம்பர் 2010 (14:22 IST)
ாஜேஷ்வ‌ரின் இந்திரவிழா படத்துடன் பாலுமகேந்திராவின் அனல் காற்று படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. ரசிகர்களின் துரதிர்ஷ்டம், அந்தப் படம் தொடங்கவே இல்லை.

தனது சினிமா பள்ளியில் பிஸியாக இருக்கும் பாலுமகேந்திரா மீண்டும் படம் இயக்குகிறார். அவரது முந்தையப் படமான அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்த ப்‌ரியாமணிதான் இதிலும் ஹீரோயின்.

எனது அடுத்தப் படத்திலும் நீயே நடிக்க வேண்டும் என பாலுமகேந்திரா ப்‌ரியாமணியிடம் முன்பே கேட்டிருந்ததாகவும், எப்போது கால்ஷீட் கேட்டாலும் நான் நடித்துத் தருவேன் என ப்‌ரியாமணி உறுதி அளித்ததாகவும் அவரது அலுவலக வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.
இந்த புதிய படத்தில் அன்வர் என்ற புனே இன்ஸ்டிட்யூட் மாணவரை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்துகிறார்.

அறிவிப்பை உடனே வெளியிடுங்க சா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :