பார்த்திபன் படத்துடன் மோதும் விஜய் ஆண்டனியின் சலீம்

Geetha priya| Last Modified செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (17:31 IST)
நான் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் சலீம் வருகிற 29 -ம் தேதி வெளியாகிறது.
நான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிப்புக்கு முதல் மரியாதை தருவதென விஜய் ஆண்டனி முடிவு செய்து ஆரம்பித்த படம் சலீம். இதுவொரு க்ரைம் த்ரில்லர். நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இனிமேல் நடிப்பில் முழுக்கவனம் செலுத்தப் போகிறேன். நேரம் அனுமதித்தால் மட்டுமே இசையமைப்பேன் என விஜய் ஆண்டனி சலீம் படப்பிடிப்பின் போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
சலீம் வருகிற 29 -ம் தேதி வெளியாகிறது. அன்றுதான் பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படமும் வெளியாகிறது. ஆகஸ்ட் 1 வெளியாவதாக இருந்த பார்த்திபனின் படம் ஜிகிர்தண்டா, சரபம் படங்களுக்கு வழிவிட்டு 29 -ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :