த‌மி‌‌ழி‌ல் நடி‌க்க நா‌ன் ரெடி - சுதீ‌ப்

Webdunia|
FILE
தமிழில் சக்கை போடு போட்ட படம் நான் ஈ. இ‌ப்பட‌த்‌தி‌‌ற்கு தமிழ் ரசிகர்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பில் மயங்கிக் கிடக்கிறார், அப்படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்ற கன்னட ஹீரோ சுதிப்.

தமிழில் நல்ல கதையாக இருந்தால் சொல்லுங்கள் நடி‌க்க‌ நான் ரெடி என்று சின்ன, பெரிய, புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். கதை வித்தியாசமாக இருப்பதோடு, கன்னடம் போலவே தமிழிலும் ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என ஆசைப்படுகிறார்.

அதனால் அதிரடி சண்டைகாட்சிகள் கொண்ட கதையாக இருந்தால் கேட்கத் தயாராக இருக்கிறாரா‌ம். அவருக்குப் பிடித்திருந்தால் அவரே தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். தமிழ் இயக்குனர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்புதா‌ன்.


இதில் மேலும் படிக்கவும் :