தொப்புள் விவகாரம் - கமிஷனர் அலுவலகத்தில் நஸ்‌ரியா புகார்

FILE

Webdunia|
நய்யாண்டி படத்தின் இனிக்க இனிக்க பாட‌லில் இடம்பெற்ற நஸ்‌ரியாவின் தொப்புள் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குறிப்பிட்ட பாடலில் நஸ்‌ரியாவின் வயிற்றை தனுஷ் தடவுவது போலவும், நஸ்‌ரியா உணர்ச்சிவசப்படுவது போலவும் ஒரு காட்சி இடம்பெறுகிறது. ட்ரெய்ல‌ரில் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போன நஸ்‌ரியா உடனடியாக இயக்குனர் சற்குணத்தை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
நீங்கள் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் டூப் நடிகையை வைத்து எடுக்க வேண்டியதாயிற்று, நான் என்ன செய்ய முடியும் என்று நஸ்‌ரியாவுக்கு சற்குணம் பதிலளித்துள்ளார். படத்தில் வரும் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் நான் நடிக்கவில்லை, டூப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள், அதனை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் என்று நஸ்‌ரியா தெ‌ரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :