1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. துரை தயாநிதி தயா‌ரிப்பில் விஜய்

Vijay in Durai Dhayanidhi Production? | துரை தயாநிதி தயா‌ரிப்பில் விஜய்

விஜய்
வேட்டைக்காரன் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதும், படம் 18ஆம் தேதி திரைக்கு வருவதும் அனேகமாக அனைவருக்கும் தெ‌ரிந்திருக்கும். அடுத்து விஜய்யின் 50வது படமான சுறா.

51வது படம்?

ஜெயம் ராஜஇயக்க ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். 90 சதவீதம் உறுதி செய்யப்பட்ட இந்த தகவலில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.

விஜய்யை வைத்து படம் தயா‌ரிக்க துரை தயாநிதி ஆசைப்படுகிறார். பெரும் தொகை தரவும் அவர் தயாராம். அதனால் விஜய்யின் 51வது படத்தின் தயா‌ரிப்பாளர் மாற்றப்படலாம் என்கிறார்கள். ஆஸ்கர் பிலிம்ஸுக்குப் பதில் கிளவுட் நைன் தயா‌ரிப்பு சுமையை ஏற்றுக் கொள்ளக்கூடும்.

இன்னும் ஓ‌ரிரு நாளில் யார் தயா‌ரிப்பாளர் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.