சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Webdunia|
FILE
4. வத்திக்குச்சி
சென்னை பாக்ஸ் ஆபிஸில் சென்ற வார இறுதியில் 6.4 லட்சங்களும், வார நாட்களில் 24.5 லட்சங்களும் வசூலித்து வத்திக்குச்சி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 3 வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 1.7 கோடி.

3. பரதேசி

மூன்றாவது இடத்தில் பரதேசி. வார இறுதியில் 7.6 லட்சங்களையும், வார நாட்களில் 55 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 4 கோடிகள்.
2. சென்னையில் ஒரு நாள்

ட்ராபிக் படத்தின் ‌ரிமேக்கான சென்னையில் ஒரு நாள் ம‌ரியாதைக்கு‌ரிய ஓபனிங்கை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 71 லட்சங்கள்.

1. கேடி பில்லா கில்லாடி ரங்கா

பாண்டிரா‌ஜின் காமெடிப் படம் முதல் மூன்று தினங்களில் 1.26 கோடி வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. காமெடிப் படம்... குடும்பத்தோடு படத்துக்கு வரும் ரசிகர்கள்... அடுத்த வார இறுதியில் 1.26 கோடி என்பது 1.5 கோடியாக உயர வாய்ப்புள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :