சிவாவின் காதலி

Webdunia| Last Modified வியாழன், 23 டிசம்பர் 2010 (20:44 IST)
முதல் படம் சென்னை 28 தொடங்கி சரோஜா, தமிழ்ப் படம் என அடுத்தடுத்து எல்லாமே ஹிட். நான்காவது படமான வ குவாட்டர் கட்டிங் மிர்ச்சி சிவாவுக்கு திருஷ்டிப் ப‌ரிகாராம். சூப்பர் பிளாப்.

ஐந்தாவது படம் எது என்பது இன்னும் முடிவாகவில்லை. எஸ்.டி.சபா இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் 16 என்ற படமும் எப்போது வெளியாகும் என்று தெ‌ரியவில்லை.

இந்நிலையில் சிவாவின் வேறொரு விஷயம் மீடியாக்களில் ‌ரிலீஸாகியிருக்கிறது. சிவாவின் காதல். ப்‌ரியா என்ற இளம் பெண்ணை சிவா காதலிக்கிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்களாம்.
திருமணம் சிவாவுக்கு திருப்புமுனையாக அமையட்டும்.


இதில் மேலும் படிக்கவும் :