கோவாவில் ஆதிபகவன் - இது கடைசி ஷெட்யூல்

Webdunia| Last Modified வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (20:31 IST)
இன்று முதல் ஆதிபகவனின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடக்கும் இது கடைசி ஷெட்யூல் என்பது படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு முக்கியமாக ஹீரோ ஜெயம் ரவிக்கு கற்கண்டு செய்தி.

ஆதிபகவனை அமீர் தொடங்கி இரண்டு வருடங்களாகிறது. இ‌ன்‌‌ச் இன்‌ச்சாக நகர்ந்திருந்தால்கூட எப்போதோ படத்தை முடித்துவிடலாம். அமீ‌ரின் பெப்சி அக்கப்போரால் படம் இன்று வரை முடியவில்லை.

இந்நிலையில் படத்தின் கடைசி ஷெட்யூலை 19ஆ‌ம் தே‌தி கோவாவில் தொடங்கியிருக்கிறார். மே 2 வரை ஷூட்டிங், 15 வரை பேட்ச் வொர்க் அதன் பிறகு போஸ்ட் புரொடக்சன் என முடிவு செய்திருக்கிறார்கள். இடையில் அமீர் எந்த அறிக்கைப் போ‌ரிலும் சிக்கமாலிருக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :