கிறிஸ்டியன் பிரதர்ஸில் சரத்குமார்

Webdunia| Last Modified புதன், 13 ஜனவரி 2010 (19:11 IST)
மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பது தெ‌ரியும். அதேபோல் ஜோஷி இயக்கும் கிறிஸ்டியன் பிரதர்ஸில் சரத்குமார் நடிக்கிறார்.

பழசிராஜாவுக்குப் பிறகு சரத்குமாருக்கு மலையாளத்தில் கௌரவம் கூடியிருக்கிறது. விருதெல்லாம் கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். அத்துடன் பட வாய்ப்புகளும் வருகின்றனவாம்.

ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் கிறிஸ்டியன் பிரதர்ஸில் மானாவா‌ரியாக நடிகர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். திலீப்பும் இந்தப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. (முதலில் இந்த வேடத்தில் நடிக்க ப்ருத்விரா‌ஜிடம்தான் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் முடியாது என முறுக்கிக் கொள்ளவே திலீப்பிடம் கேட்டிருக்கிறார்கள்).
இந்தப் படத்தில் நடிக்க சரத்குமா‌ரிடமும் கேட்டிருக்கிறார்கள். சரத்துக்கு ஏற்ற கேரக்டர் என்பதால் அவரும் ஓகே சொல்லியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :