காதல் சங்கடத்தில் சமந்தா

Webdunia|
FILE
சரும பிரச்சனையிலிருந்து தப்பித்து இப்போதுதான் நிம்மதியுடன் இருக்கிறார் சமந்தா. அந்த நிம்மதியை குலைக்கும் விதமாக ஆந்திராவிலும், தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக வதந்தி சமந்தாவை சுற்றியடிக்கிறது.

சமந்தாவும் சித்தார்த்தும் காதலிக்கிறார்கள் என்பதுதான் அந்த வதந்தி.

மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த் சோனம் கபூர், ஸ்ருதிஹாசன் என பலருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ருதியுடனான நெருக்கம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு போனது. இப்போது சித்தார்த்துடன் சமந்தாவின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது.
இருவரும் அமெரிக்காவில் விடுமுறையை ஒன்றாக கழித்தனர் என்பதிலிருந்துதான் இந்த வதந்தி கிளம்பியது. ஆனால் இதனை சமந்தா மறுத்துள்ளார். அமpக்கா மேட்டரை பற்றி வாய் திறக்காதவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததை சரும நோய் என்று தவறாக வதந்தி கிளப்பியவர்கள் இப்போது காதலிக்கிறேன் என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் காதல், கல்யாணம் எல்லாம் சொந்த விஷயம், அதில் யாரும் தலையிடுவது ச‌ரியல்ல என்று கூறியுள்ளார்.

சித்தார்த்தை காதலிக்கிறாரா இல்லையா என்பதை மட்டும் கடைசிவரை சமந்தா சொல்லவேயில்லை.


இதில் மேலும் படிக்கவும் :