காணாமல் போனவர்களை கவர்ந்து வரும் வெங்கட்பிரபு

Surya, Venkat Prabhu, சூ‌ர்யா, வெ‌ங்க‌ட்‌பிரபு, பூ‌ச்சா‌ண்டி
Geetha Priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (12:55 IST)
காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்த ராம்கியை தேடிப் பிடித்து பிரியாணியில் நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. கொஞ்சம் பழசான பிரியாணியாக படம் தோன்றியதற்கு ராம்கியின் பங்களிப்பும் சிறிது உண்டு.
காணாமல் போனவர்கள் மீதான வெங்கியின் பிரேமை அடுத்தப் படத்திலும் தொடர்கிறது.
 
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். இது காமெடி ஹாரர் படம் என்றும் படத்துக்கு பூச்சாண்டி என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் உலவுகிறது.
 
இந்தப் படத்தில் முன்னாள் வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்த மோகன் இன்று தமிழ் சினிமாவின் ஞாபக அடுக்குகளில் மட்டுமே இருந்து வருகிறார். சினிமா ஆசையில் அவர் நடித்த சுட்டப்பழம் சரியாகப் போகவில்லை என்பதுடன் ஒரு புதுமுகத்துக்கான வரவேற்பும்கூட கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் அவரை தனது படத்தில் வெங்கட்பிரபு நடிக்க வைக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :