கமலுடன் கைகோர்க்கும் வீடியோகான், ‌ரிலையன்ஸ்

Webdunia|
FILE
விஸ்வரூபம் படத்தை டிடிஹெச்-சில் வௌளியிடுவது என்பதில் கமல் உறுதியாக உள்ளார். ஏர்டெல் நிறுவனம் இப்படத்தை ஒளிபரப்புகிறது.

கமலின் இந்தத் திட்டத்தால் திரையரங்கு உ‌ரிமையாளர்களில் சிலர் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர். விஸ்வரூபத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் எனவும் தெ‌ரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏர்டெல் மட்டுமின்றி வீடியோகான், ‌ரிலையன்ஸ் டிடிஹெச் சர்வீஸ் மூலமாகவும் விஸ்வரூபத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் கமல். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக‌த் தெ‌ரிகிறது.
வரும் ஜனவ‌ரி 11ஆம் தேதி விஸ்வரூபம் திரையரங்குகளில் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :