இணையத்தில் ஜக்குபாய்

Webdunia| Last Modified திங்கள், 4 ஜனவரி 2010 (16:22 IST)
சரோஜபடத்தில் டிவிடி ஒன்றை காட்டி, ‘மருதநாயகம் டிவிடி சார்’ என்பார் பிரேம்‌ஜி. அது காமெடி அல்ல, நிஜமாகவே நடக்க சாத்தியமுள்ளது. திரையில் வெளியாகாத சரத்குமா‌ரின் ஜக்குபாய் இணையதளத்தில் வெளியாகியிருப்பதே அதற்கு‌ச் சான்று.

சரத்குமார், ஸ்ரேயா நடித்திருக்கும் ஜக்குபாயை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். படத்தில் சரத்தின் மகளாக நடித்திருக்கிறாராம் ஸ்ரேயா. பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இப்படத்தின் ‌ரிலீஸ் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்னணி இசை சேர்க்காத ஜக்குபாய் படம் வெளிநாட்டு இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த‌ச் செய்தி கிடைத்ததும் படத்தை தயா‌ரித்த ராடன் உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்தது. இதையடுத்து கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஜக்குபாய் திருட்டு விசிடி விற்ற பலரை போலீஸார் கைது செய்தனர்.

ரிலீஸாகாத ஒரு படம் டிவிடியாக விற்பனைக்கு வந்தது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருட்டு விசிடி வி‌‌‌ற்பவர்களுக்கு குண்டர் சட்டத்தில் சிறை என்பது மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, ஆறுதல்.
ஒரு சந்தேக கேள்வி. ஜக்குபாய் படம் ழான் ரெனே நடித்த வசாபி படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமலே இந்த தழுவல் நடந்திருக்கிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், திருட்டு டிவிடி விறபவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளும் அரசு, கதை திருடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கும்?


இதில் மேலும் படிக்கவும் :