இணையதளத்தில் வாரணம் ஆயிரம்!

webdunia photoWD
படப்பிடிப்பு முடியவில்லை, டப்பிங் பேசவில்லை, பின்னணி இசை சேர்க்கவில்லை. அதற்குள் உலக ஊடகங்களில் முதன் முறையாக சில இணையதளங்களில் ரிலீஸாகியிருக்கிறது கெளதமின் வாரணம் ஆயிரம்!

இது எப்படி?

"என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த ஒரு நபர், வாரணம் ஆயிரம் படத்தின் பாடல் சி.டி.யை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் மூலமாகத்தான் இணையதளங்களில் வாரணம் ஆயிரம் பாடல் காட்சி வந்திருக்க வேண்டும்" என்றார் கெளதம்.

இணையதளங்கள் வெளியிட்டிருப்பவை சூர்யா, சமீரா ரெட்டி நடித்துள்ள பாடல் காட்சி. நல்லவேளையாக இது எடிட்டிங் செய்யாத காட்சிகள். படத்தில் இது வேறுமாதிரி இருக்குமாம்.

என்றாலும், விவேக் ஒரு படத்தில் கூறுவதுபோல், எடுத்த வரைக்கும் இருக்கு பார்க்கிறியா என்ற கமெண்டுக்கு ஆளாகிவிட்டதே¨ என்ற கவலை தயாரிப்பாளருக்கும், கெளதமுக்கும்.

Webdunia|
முதலீடு செய்தவர்களுக்கு வலிக்கத்தானே செய்யும்!


இதில் மேலும் படிக்கவும் :