1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

அ‌ஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்தப் பொங்கலை அ‌ஜித்தின் அசலுடன் ‘தல’ப் பொங்கலாக கொண்டாடலாம் என்றிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்று கசிந்திருக்கும் செய்திதான் இந்த ஏமாற்றத்துக்கு காரணம்.

சரண், அ‌ஜித், பரத்வா‌ஜ் காம்பினேஷனின் நான்காவது படம், அசல். பழி வாங்கும் கதையான இதில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அ‌ஜித். அவருக்கு ஜோடி சமீராரெட்டி. படத்தில் பாவனாவும் உண்டு. அ‌ஜித்துடன் இரண்டு பாடல்கள் இருப்பதால் நான்தான் நாயகி என கூறி வருகிறார் பாவனா.

சிவா‌ஜி பிலிம்ஸ் பிர‌ம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே அனைவ‌ரின் எண்ணம். தற்போது அதில் சின்ன மாற்றம்.

பொங்கலுக்குப் பதில் ஜனவ‌ரி 26 குடியரசு தினத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில டாக்கி போர்ஷன்கள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பொங்கலுக்கே படம் வந்தாலும் ஆச்ச‌ரியமில்லை.