அரிமா நம்பியும் அதிரடி சேஸிங்கும்

Geetha Priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (15:04 IST)
இவன் வேற மாதிரி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படம் அரிமா நம்பி. முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு ஜோ‌டியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். 
துப்பாக்கி படத்தின் போது ஆனந்த் சங்கரின் சுறுசுறுப்பையும், திறமையும் பார்த்து தாணு அவருக்கு அளித்த வாய்ப்புதான் இந்த அரிமா நம்பி. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கால்ஷீட் வாங்கித் தரேன் என்று தாணு சொன்ன பிறகும் முன்னணி நடிகர்கள் வேண்டாம், வளர்ந்து வரும் விக்ரம் பிரபு போதும் என்று தனது ஸ்கிரிப்டில் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு அறிமுகம் இசையமைத்திருக்கும் ட்ரம்ஸ் சிவமணி.
 
ஆக்ஷன்... ஆக்ஷன் தவிர வேறில்லை என்று சொல்லும் அளவுக்கு சண்டைக் காட்சிகளால் நிறைந்திருக்கிறது படம். சமீபத்தில் சேஸிங் காட்சியொன்றை வடசென்னையின் பிஸியான சாலைகளிலும், தெருக்களிலும் படமாக்கினர். விக்ரம் பிரபுவையும், ப்ரியா ஆனந்தையும் வில்லன்களின் ஆள்கள் துரத்துவதாக காட்சி. பத்து தினங்கள் உழைத்து இந்த ஏழு நிமிட சேஸிங் காட்சியை எடுத்திருக்கிறார்கள். ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு அற்புதமாக வந்திருக்கிறது என்று படயூனிட் நம்பிக்கையுடன் கூறுகிறது.
 
அரிமா நம்பியின் வெற்றியை விக்ரம் பிரபுவும் அவரது குடும்பமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. படம் வெற்றியடைந்தால் விக்ரம் பிரபுவுக்கு அது ஹாட்ரிக் வெற்றி.
 


இதில் மேலும் படிக்கவும் :