அதிரடி கட்டளை

Webdunia| Last Modified சனி, 9 ஜனவரி 2010 (17:26 IST)
திருட்டு வி.சி.டி., இன்டெர்நெட்டில் பாடல்கள் வெளியீடு என பல்வேறு தரப்பிலிருந்து சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் வெகுண்டெழுந்தது. அவ்வப்போது புதுப்பட சி.டி.க்கள் பிடிபட்டாலும், தொடர்ந்து திருட்டு சி.டி. விற்பனை ஜோராகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும், அப்போதுதான் தமிழ் சினிமா பிழைக்கும். இல்லை என்றால் அழிந்துபோகும் என்ற நிலையில் தமிழக முதல்வரை சந்தித்தது நடிகர்கள் குழு, மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம்.

நடிகர்களில் ரஜினிகாந்த், கமல், சரத்குமார், பிரபு மற்றும் ஏவி.எம். சரவணன், ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், அபிராமி ராமநாதன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆலோசித்த முதல்வர், இனி திருட்டு சி.டி. தயாரித்தாலோ அல்லது வைத்திருந்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்பின்தான் கொஞ்சம் நிம்மதியாக வெளியேறினர் திரைத்துறையினர். இனியேனும் திருட்டு சி.டி. ஒழியுமா? பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :