அதர்வாவின் கணிதனில் நடிக்கும் ஜாக்கி ஷெராஃப்

Last Modified வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:47 IST)
இரும்பு குதிரை, ஈட்டி படங்களில் நடித்து வரும் அதர்வாவின் இன்னொரு படம் கணிதன். அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கம். இந்தப் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜாக்கி ஷெராஃப் இதற்கு முன் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தில் நடித்தார். அவரைத் தவிர வேறு யாரையும் அந்த வேடத்தில் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமான நடிப்பு. அதன் பின் கோச்சடையானில் நடித்தார். அதில் ரஜினிக்கு வில்லன்.
 
இந்த இரு படங்களை அடுத்து கணிதனில் தற்போது நடிக்க உள்ளார். கேதரின் தெரேஸா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.
 
ட்ரம்ஸ் சிவமணி முதல்முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :