அஜீத், த்ரிஷாவின் ரொமான்டிக் பாடல் - ஹாரிஸ் ஜெயராஜ் தகவல்

Ajith, Trisha, Harris
Ravivarma| Last Modified வெள்ளி, 25 ஜூலை 2014 (17:34 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் பலவகைகளில் முக்கியமானது. இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்வது இதுவே முதல்முறை. அதேபோல் மின்னலே தொடங்கி வாரணம் ஆயிரம் வரை இணைந்து பல ஹிட் பாடல்கள் தந்த கௌதம், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை என்ற முக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இந்தப் படத்தில்தான்.
 
கௌதம் - ஹாரிஸ் - தாமரை மூன்று பேரும் இணைந்து பல அற்புதமான பாடல்களை தந்துள்ளனர். ஹாரிஸை பிரிந்த பிறகு கௌதம் தாமரையை அதிகமாக பயன்படுத்தவில்லை. அஜீத் நடிக்கும் இந்த புதிய படத்தில் அனைத்துப் பாடல்களையும் தாமரையே எழுதுவதாக கூறப்படுகிறது.
அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்த கௌதம் தற்போது த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார். அஜீத், த்ரிஷா இருவருக்கும் டூயட் பாடல் ஒன்று உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். 
 
அஜீத், த்ரிஷாவின் ரொமான்டிக் பாடலை ஒலிப்பதிவு செய்திருப்பதாகவும், தாமரையின் வரிகளில் இதுவரையில்லாத அளவுக்கு பாடல் இளமையாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலை பாடகர் கார்த்திக் பாடியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :