வியாழன், 28 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. இனிப்புகள்
Written By Webdunia

சாக்லெட் பர்பி - தீபாவளி ஸ்பெஷல்

FILE
தீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடைகளுக்கு அடுத்து நம் நினைவிற்கு வருவது இனிப்புகள் தான். அதிரசம், முறுக்கு என பாரம்பரியமான உணவு வகைகளை வீட்டில் செய்தாலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், குழந்தைகள் ஆகியோரின் மனம்கவர இந்த எளிதான சாக்லெட் பர்பி செய்து, தீபாவளியன்று அனைவரது பாரட்டுகளையும் பெற்று மகிழுங்கள்.

தேவையானவை

மைதா - 3/4 கப்
கோகோ பவுடர் - 1/2 கப் (அ) சாக்லெட் பார் (பெரியது) - 1
சர்க்கரை - 11/2 கப்,
நெய் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.

FILE
செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் மைதாவை போட்டு நன்றாக வறுக்கவும்.

இந்த கலவையை தனியாக வைத்து மற்றொரு பாத்திரத்தில் சக்கரை பாகு செய்துக்கொள்ளவும்.

இந்த சக்கரை பாகில் கோகோ பவுடர் (அ) துருவிய சாக்லெட், வறுத்த மைதா ஆகிவற்றை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு தட்டின் மீது கொட்டி, சமமாக பரப்பி சிறிது நேரம் கழித்து துண்டுகளாக வெட்டினால் சுவையான சாக்லெட் பர்பி தயார்.