வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Caston
Last Updated : சனி, 27 மே 2017 (14:58 IST)

நம்ம ஊரு பலகாரம்; நம்ம வீடு தேடி வரும்!

நம்ம ஊரு பலகாரம்; நம்ம வீடு தேடி வரும்!

வேகமாக சுழலும் உலக வாழ்க்கையில் பலரும் தங்கள் அடையாளத்தை இழந்து புதிய புதிய கலாச்சாரங்களுக்கு தங்களை மாற்றிக்கொண்டு உலக நீரோடையில் பயணித்து வருகின்றனர். ஆனால் இரு இளைஞர்கள் இதற்கு விதிவிலக்காக நமது பாரம்பரியமான உணவு பண்டங்களை இணையத்தின் மூலம் உலகுக்கு எடுத்து செல்கிறார்கள்.


 
 
வெளிநாட்டு பயணம், கை நிறைய சம்பாளத்தில் கிடைத்த வேலையை உதறித்தள்ளி விட்டு முற்றிலும் ஒரு புது முயற்சியை நான்கு வருடங்களுக்கு முன் இரண்டு இளைஞர்கள்  முன்னெடுத்தார்கள். நம்ம ஊர் கிராமத்துத் தின்பண்டங்களை உலகம் முழுதும் நேட்டிவ்ஸ்பெசல் என்ற இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
 
தங்களின் இந்த சாதனை பயணத்தை குறித்து பேசிய இளைஞர்கள், எந்த ஒரு நாடோ, இனமோ அவர்களின் உணவுப் பழக்கமே அவரவர் கலாச்சார பலத்தின் முதல் குறியீடு. அப்படிப் பல படிநிலைகள் கடந்து முழுமை அடைந்து நிற்கும் ஒரு சிறந்த உணவுக் கலாச்சாரத்திற்கு உரிமையானவர்கள் நாம்.
 
உலகின் எந்த உணவு முறைக்கும் சற்றும் சளைக்காத நமது உணவு முறை, உணவுக் கலாச்சாரத்தின் உச்சம். உணவுக் கலாசாரம் முழுமையான முதிர்ச்சி அடையாத அமெரிக்கா போன்ற நாடுகளில் கலோரீஸ் பார்த்து உண்ணும் வழக்கமும், தவறினால் ஒபீசிட்டி போன்ற நோய்களுக்கு உள்ளாகும் அபாயத்தில் வாழும் நிலையும் இன்று வரை தொடரும் தொடர் கதைதான்.
 
ஆனால் நமக்கோ கடலைமிட்டாய், தேன்மிட்டாய், தேங்காய் மிட்டாய் என குழந்தைகள் துவங்கி, முதியவர்கள் வரை அனைவரும் ரசித்து ருசித்து சுவைக்க ஏற்ற பலகாரங்கள் இங்கு ஏராளம். இப்பண்டங்களின் சிறப்பு அவற்றின் ருசி மட்டுமின்றி அதன் சரிவிகித சத்தும் தான். இப்படிப்பட்ட உணவுப்பண்டங்களில் இருந்து நாம் விலகும் நிதர்சனம் அறிந்ததே இம்முயற்சியை மேற்கொண்டோம் என கூறினர்.

 

 
பர்கர், பீசா போன்றவற்றை ஆர்டர் செய்து தங்கள் வீட்டிலே வரவழைத்து உண்ணும் நமது மக்களுக்கு மணப்பாறை முறுக்கு , திருநெல்வேலி அல்வா, தங்கமணி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு என நம் பாரம்பரிய உணவுகளை NativeSpecial.com என்ற இணையதளத்தின் மூலம் வீட்டுக்கே கொண்டு சேர்க்கின்றனர்.
 
NativeSpecial.com மூலம் இந்த சேவையை இவர்கள் இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, லண்டன், கனடா என பல நாடுகளுக்கு ஐந்தே நாட்களில் அளிக்கிறார்கள். இவர்களின் இந்த முயற்சி பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பலருக்கும் உத்வேகமாக இருக்கும்.