வாழைப்பழ பொங்கல்

Webdunia|
அறுவடை திருநாளான பொங்கலன்று பாரம்பரிய முறையில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் வெண் பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல் வகைகளுடன், இந்த புதுவகை வாழைப்பழ பொங்கல் பொங்கலை சுவைத்து குடும்பத்தோடு பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழுங்கள்.

தேவையானவை

பாசிபருப்பு - 1/4 கப்
கொண்டை கடலை - 1 ஸ்பூன்
அரிசி - 1 கப்
பால் - 1 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
வாழைப்பழம் - 3
உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
செய்முறை

ஒரு தவாவில் பாசி பருப்பு மற்றும் கொண்டை கடலையை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தனியே வைத்துகொள்ளவும்.

குக்கரில் அரிசி, வறுத்த பருப்பு வகைகள், பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

வெல்லத்துடன் தேவையான அளவு, தண்ணீர் சேர்த்து பாகு எடுத்துகொள்ளவும்.
வேகவைத்த அரிசி பருப்பு கலவையை வெல்லபாகு,ஏலக்காய் தூள் மற்றும் வாழைப்பழ துண்டுகளோடு சேர்த்து கலந்துகொள்ளவும்.

ஒரு வானலியில் நெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை நிறம் மாறும்வரை வறுத்து வாழைப்பழ பொங்கலுடன் சேருங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :