வாழைப்பழ அடை - மலபார் ஸ்பெஷல்

Webdunia|
தேவையான பொருட்கள்:

பாதி கனிந்த வாழைப்பழம் - 2 (செங்காய்)
துருவிய தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் செங்காயான வாழைப்பழத்தை தோலுடன் - பு‌ட்டு வேக வை‌ப்பது போல - ஆவிக் கட்டிக்கொள்ளவும். பிறகு அதன் தோலை உரித்து, அதிலுள்ள விதைகளை நீ‌க்‌கி, தண்ணீர் சேர்க்காமல் அதைப் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீரில் சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரைப் பாகு எடுத்துக்கொள்ளவும். பிறகு அதில் துருவிய தேங்காயையும் உப்பையும் சேர்ந்து கலந்துகொள்ளவும். அதனுடன் நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை கலந்து பூரணமாக வைத்துகொள்ளவும்.

வேக வைத்த வாழைப்பழத்தை சிறு உருண்டையாக்கி, அதன் நடுவே இந்தப் பூரணத்தை வைத்து உருண்டையாக்கி, தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :