முந்திரி பர்பி

Webdunia|
தேவையான பொருட்கள்

மில்க்மெய்ட் - 1/2 டின்

முந்திரி பருப்பு - 25 கிராம்

டெய்ரி மில்க் சாக்லேட் - 1/2


செய்முறை

மில்க் மெய்ட் டின்னை அறுத்து, பாதி மில்க் மெய்ட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரி பருப்பை பச்சையாக மிக்ஸியில் பொடி செய்யவும்.
வாணலியில் மில்க் மெய்ட் பால் விட்டு முந்திரி பொடியை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலி ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

தாம்பாளத்தில் நெய் தடவி, அதில் கிளறிய மில்க்மெய்ட், முந்திரி கலவை ஊற்றவும். ஆறிய பின் துண்டுகளாக போடவும்.


இதில் மேலும் படிக்கவும் :