முந்திரி பட்டர் பாசந்தி

Webdunia|
தேவையான பொருட்கள்

முந்திரிப் பருப்பு - 250 கிராம்

புழுங்கலரிசி - 50 கிராம்

பால் - 1/2 லிட்டர்

தேங்காய் - 1/2 மூடி

சர்க்கரை - 375 கிராம்

வெண்ணெய் - 75 கிராம்

நெய் - 50 கிராம்
மஞ்சள் - 1/2 துண்டு

பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்


செய்முறை

முந்திரியை வெந்நீரில் ஊற வைக்கவும். அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து முந்திரியையும் அரிசியையும் தனித்தனியே மைய அரைத்து வைக்கவும், ஒரு லிட்டர் பாலையும் 1/4 லிட்டர் பாலாக ஆகும் வரை சுண்டக் காய்ச்சி இறக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து கெட்டிப் பாலாக ஒரு டம்ளர் எடுக்கவும். முந்திரி விழுது, அரிசி விழுது, சுண்டிய பால், தேங்காய் பால், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
மஞ்சள் துண்டை அம்மியில் அரைத்து, அதனுடன் பெருஞ்சீரகத்தையும் லேசாக அரைத்து ஒரு கரண்டிசாறு எடுத்து வடிகட்டி முந்திரி கலவையில் கலக்க வேண்டும். கடைசியில் வெண்ணெய், உருக்கிய நெய் இவற்றையும் சேர்த்து நன்றாக சர்க்கரையையும் கரைத்து ஒரு பாத்திரத்தில் பாதியளவு வரை ஊற்றி குக்கரில் வைத்து முப்பது நிமிட நேரம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இதோ ரெடி உங்கள் ருசிக்கான முந்திரி பட்டர் பாசந்தி


இதில் மேலும் படிக்கவும் :