பைனாப்பிள் ஸ்வீட் ரோல்

Webdunia|
FILE
அன்னாசி பழத்தை எப்போதும்போல் சாப்பிடாமல், புதிய முறையில் இனிப்பு வகையாக செய்து மாலை நேரங்களில் குடும்பத்தோடு உண்டு மகிழுங்கள்.

தேவையானவை

அன்னாசி பழம்(துருவியது) - 1 கப்
லவங்கம் - 4
சக்கரை - 1 கப்
நெய் - தேவைகேற்ப
மைதா - 1 கப்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
செய்முறை

மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து சிறு பூரிகளாக தட்டி பொறித்து தனியே வைக்கவும்.

சக்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சிகொள்ளுங்கள்.

பொரித்த பூரிகளை சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள்.
ஒரு வானலியில் நெய் ஊற்றி துருவிய அன்னாசி பழம், லவங்கம், உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை வதக்கவும்

வதக்கிய அன்னாசி பழ கலவையை சக்கரை பாகில் ஊறிய பூரிகளிளுள் வைத்து ரோல் போல உருட்டுங்கள்.

ரோல் பிரிந்து வராமல் இருக்க ரோலின் முனையில் ஒரு லவங்கத்தை வைத்து அழுத்துங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :