பிஸ்தா சந்தேஷ்

Webdunia|
பிஸ்தா சந்தேஷ் ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். எதிர்பாராத நேரத்தில் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிஸ்தா சந்தேஷை நொடியில் செய்து அசத்தலாம்.

தேவையானவை

பன்னீர் (துருவியது) - 225 கிராம்
சக்கரை - 100 கிராம்
பால் - 1 கப்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
பிஸ்தா - 1 கப்

செய்முறை
துருவிய பன்னீர்,பால் மற்றும் சக்கரையை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்துகொள்ளவும்.

வானலியில் இந்த கலவையை அதில் போட்டு கிளறவும்.

கலவை கெட்டிப்பட்டதும் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

ஒரு தட்டில் பொடியாக நறுக்கிய பிஸ்தாவை பரப்பிவைக்கவும். தயார் செய்த கலவையை பிஸ்தாவின் மீது பரவலாக தடவி சிறிது நேரம் ஆறவிடவும்.
சிறிது நேரம் கழித்து தட்டை தலைகீழாக திருப்பி பிஸ்தா சந்தேஷை விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.


இதில் மேலும் படிக்கவும் :