திணை சக்கரை பொங்கல்

Webdunia|
திணை சக்கரை பொங்கல்

தேவையானவை

திணை - 3/4 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
நெய் - தேவைகேற்ப
உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு

செய்முறை
திணை மற்றும் பாசி பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்

குக்கரில் வறுத்த திணை, பாசிபருப்பை 3 கப் தண்ணீரில் 4 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

பருப்பு கலவை நன்கு வெந்ததும் அதனோடு வெல்ல பாகு,ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கவும்
ஒரு வானலியில் நெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை நிறம் மாறும்வரை வறுத்து திணை சக்கரை பொங்கலுடன் சேருங்கள்.

திணை சக்கரை பொங்கல் , வாழைப்பபொங்கல், இனிப்பு, பொங்கல்,பொங்கல் வகை, பொங்கல் வகைகள், திணை, வாழைப்பழம்


இதில் மேலும் படிக்கவும் :